Actor Vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சினிமாவை விட்டு போகிறார் எனக் கூறிய பொழுது பலரும் சோகமாகிவிட்டனர்.
இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்குப் பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் தான் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு முழுமையாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலை நோக்கி போக இருக்கிறார் விஜய். கண்டிப்பாக 2026 ஆம் தேர்தல் விஜய்க்கு ஒரு முக்கியமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடிக்க போகும் இறுதி திரைப்படம் எப்படி இருக்க போகிறது என்னும் எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கிறது.
விஜய்யின் அடுத்த படம்
இந்த திரைப்படத்திற்கு வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் என நிறைய இயக்குனர்கள் வரிசையில் நிற்கின்றனர் ஆர்.ஜே பாலாஜி கூட விஜய்யை வைத்து திரைப்படம் எடுக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் கதை குறித்து விஜய் ஒரு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது கதைப்படி விஜய் முதலமைச்சராக இருக்க வேண்டும். அதில் அவர் செய்யும் மாற்றங்களே பட கதையாக இருக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார் விஜய். இந்த நிலையில் இந்த இயக்குனர்களில் யார் விஜய்க்கு பிடித்த மாதிரியான கதையை எழுதிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு விஜய் வாய்ப்பு அளிக்க போகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
அரசியலைப் பொறுத்தவரை அதை சுவாரசியமாக ஏற்கனவே திரையில் காட்டியவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி என்பதால் அவருக்கு கூட வாய்ப்புகள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் கண்டிப்பாக பெரும் வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






