என்னையா பெரிய காசு!.. விஜயகாந்த் வீடியோவை பார்த்து உடைந்து அழுத அவரது மகன்!..

Vijayakanth: தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் வள்ளலாக போற்றப்படுபவர் விஜயகாந்த். சமூக வலைத்தளங்கள் தாமதமாகவே பிரபலமானதால் விஜயகாந்த் செய்த நன்மைகள் எல்லாம் பெரிதாக மக்கள் மத்தியில் தெரியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்பிற்கு பிறகு அவரை குறித்த பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் வந்த திரளான மக்கள் கூட்டம் மூலமாக எப்படிப்பட்ட ஒரு மனிதராக விஜயகாந்த் இருந்தார் என்பது உலகிற்கு தெரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து முதலமைச்சராகாத ஒரு ஒருவருக்கு இவ்வளவு கூட்டம் என்றால் அது விஜயகாந்திற்குதான் என கூறலாம்.

Social Media Bar

நடிகர் சங்கத்தின் நினைவேந்தல்:

இந்த நிலையில் விஜயகாந்த் ஏற்கனவே நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பல நன்மைகளை செய்ததால் அவருக்கு நடிகர் சங்கம் சார்பாக ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியை தயார் செய்தனர். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது. இதில் பிரபலங்கள் மற்றும் விஜயகாந்தின் குடும்பத்தார் கலந்துக்கொண்டனர்.

உடைந்து அழுத மகன்

இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் குறித்த பல்வேறு வீடியோக்கள் போடப்பட்டன. அதில் விஜயகாந்த் பேசி ட்ரெண்டான முக்கியமான வீடியோ வந்தது. அந்த வீடியோவில் என்னையா காசு காசுன்னு அடிச்சிக்கிறீங்க. என விஜயகாந்த் பேசுவதை பார்த்து மனம் உடைந்து அழ துவங்கிவிட்டார் அவரது மகன் விஜய பிரபாகரன்.

மேலும் அவர் பேசும்போது கேப்டன் நம்மைவிட்டு போகவில்லை. அவர் நம்முடன் தான் இருக்கிறார். நடிகர் சங்கம் நடத்திய எந்த ஒரு விழாவிலும் நான் கலந்துக்கொண்டதில்லை. கலந்துக்கொண்டே முதல் நிகழ்ச்சியே மறக்க முடியாததாக அமைந்துள்ளது என கூறியுள்ளார் விஜயபிரபாகரன்.