Connect with us

அப்பாவின் கனவு படத்தை எடுக்க களம் இறங்கிய விஜயகாந்த் மகன்!.. கேப்டனுக்கு இப்படியொரு ஆசை இருந்ததா?

vijayakanth

News

அப்பாவின் கனவு படத்தை எடுக்க களம் இறங்கிய விஜயகாந்த் மகன்!.. கேப்டனுக்கு இப்படியொரு ஆசை இருந்ததா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் சிறப்பாக தனது பணியை ஆற்றியவர் கேப்டன் விஜயகாந்த். இவற்றையெல்லாம் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த்.

இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்பிற்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்துக்கொண்டுள்ளன. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தின் கனவு படமான ஜெட்லீ திரைப்படம் ஒன்றை தமிழில் படமாக்க திட்டமிட்டுள்ளார்.

சீனாவில் ஜெட்லி நடிப்பில் வெளிவந்த மை பாதர் இஸ் எ ஹீரோ என்கிற திரைப்படத்தை விஜயகாந்த் அவரது மூத்த மகனான விஜயபிரபாகரனுடன் சேர்ந்து தமிழில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் கடைசி வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை.

இதனை தொடர்ந்து அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் விஜயபிரபாகரன். காலமும் நேரமும் கை கூடி வரும் பட்சத்தில் அந்த திரைப்படம் தமிழில் வெளியாகும் என கூறியுள்ளார் விஜயபிரபாகரன்.

To Top