Connect with us

கேப்டன் யாருக்குமே டைம் இல்ல ஹெல்ப் பண்ணுங்க!.. அடிக்கிற மழையில் 2 நாள் தூங்காமல் களம் இறங்கிய விஜயகாந்த்!..

vijayakanth

Cinema History

கேப்டன் யாருக்குமே டைம் இல்ல ஹெல்ப் பண்ணுங்க!.. அடிக்கிற மழையில் 2 நாள் தூங்காமல் களம் இறங்கிய விஜயகாந்த்!..

Social Media Bar

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் ஒரு நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது எளிமைதான். விஜயகாந்த் குறித்து அவரை சுற்றியுள்ளவர்கள் கூறும்போது விஜயகாந்த் தனது வாழ்நாளில் பெரிய நிறுவனங்களில் ப்ராண்டட் சட்டைகளை உடுத்தியது கிடையாது.

அதே போல தனது வாழ் நாளில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியதும் கிடையாது. தமிழ் சினிமாவிலேயே இந்த அளவிற்கு எளிமையாக மற்றொரு நடிகர் கிடையாது. தன்னுடைய 100 ஆவது படமான கேப்டன் பிரபாகரன் வரையிலுமே ஒரு கூரை கொட்டகையைதான் தன்னுடைய அலுவலகமாக வைத்திருந்தாராம் கேப்டன்.

Vijayakanth
Vijayakanth

நடிப்பிலும் அதே மாதிரி மிகவும் எளிமையாக இருப்பார். கேரவன் இருந்தால்தான் நடிக்க வருவேன் என இப்போது இருக்கும் நடிகர்கள் சொல்லும் நிலையில் மர நிழலில் படுத்தே ஓய்வெடுத்து கொள்வாராம் கேப்டன். இந்த நிலையில் அவரது நடிப்பில் அலெக்சாண்டர் என்கிற திரைப்படம் தயாராகி கொண்டிருந்தது.

அந்த திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் ஒரு துறைமுகத்தில் படமாக்கப்பட இருந்தது. ஆனால் அன்றைய தினம் துவங்கி 3 நாட்களுக்கு வெகுவான மழை பெய்ய துவங்கியது. இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. அடுத்த 2 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது.

alexandar
alexandar

ஏனெனில் அதற்கு பிறகு படத்தில் நடிக்கும் மற்றா நடிகர்கள் வேறு படங்களுக்கு நடிக்க சென்றுவிடுவார்கள். ஆனால் அப்படி இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் அதில் விஜயகாந்த் ஓய்வில்லாமல் நடிக்க வேண்டி இருக்கும்

இந்த நிலையில் விஷயத்தை விஜயகாந்திடம் கூறியுள்ளனர். அது பரவாயில்லை நான் சமாளித்துக்கொள்கிறேன் என கூறிய விஜயகாந்த் தூக்கம் கூட இல்லாமல் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடித்து கொடுத்துள்ளார்.

To Top