Connect with us

ஹீரோக்கள் இளம் நடிகைகள் கூட நடிக்குறதுக்கு மக்கள்தான் காரணம்.. கேப்டன் கொடுத்த பதில்!..

vijayakanth

Tamil Cinema News

ஹீரோக்கள் இளம் நடிகைகள் கூட நடிக்குறதுக்கு மக்கள்தான் காரணம்.. கேப்டன் கொடுத்த பதில்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் வரை நடித்து தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்தவர் விஜயகாந்த்.

அதேபோல ஆக்ஷன் படங்களை பொறுத்தவரை விஜயகாந்துக்கு நிகராக இன்னொரு ஹீரோ இல்லை என்று கூறலாம். தனது உடல் எடையை கூட பொருட்படுத்தாமல் கயிறை கட்டி சண்டை காட்சிகளில் நடிப்பார். அப்பொழுது அவரது உடல் முழுக்க வலி ஏற்படும் என்றாலும் கூட மக்களுக்காக அதைப் பொறுத்துக் கொண்டு நடிக்க கூடியவர் விஜயகாந்த்.

விஜயகாந்திடம் ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது பொதுவாக அனைத்து நடிகர் மீதும் இருக்கும் ஒரு கேள்வியை கேட்டிருந்தனர். வயதான பிறகும் கூட எதற்கு நடிகர்கள் இளம் கதாநாயகிகளுடன் நடிக்கிறீர்கள் என்று விஜயகாந்த்திடம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த விஜயகாந்த் நீங்கள் கேட்டது நல்ல கேள்விதான் ஆனால் இதில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. என்னவென்றால் நீங்கள் இளம் நடிகைகளை விரும்புவதால்தான் நாங்கள் நடிக்கும் படங்களில் இளம் நடிகைகளை கதாநாயகிகளாக வைக்கிறார்கள்.

ஒருவேளை இப்பொழுது பழைய நடிகைகளை கதாநாயகிகளாக போட்டால் நீங்கள் பார்ப்பீர்களா. பானுமதி கதாநாயகியாக நடித்தாலும அவருடன் நடிக்க நான் தயார். ஆனால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். எனவே திரைப்படங்களில் வயதான ஹீரோக்களுக்கு இளம் கதாநாயகிகளை நடிகையாக போடுவதற்கு காரணம் மக்கள்தான் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் விஜயகாந்த்.

To Top