Connect with us

இரண்டு இளம் நடிகர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன்!.. கடைசியாக விவேக்கிற்கு உதவிய விஜயகாந்த்!..

vivek vijayakanth

Cinema History

இரண்டு இளம் நடிகர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன்!.. கடைசியாக விவேக்கிற்கு உதவிய விஜயகாந்த்!..

Social Media Bar

Vivek and Vijayakanth: பெரும் நடிகர்களே தங்களுடன் பணிப்புரிபவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத காலக்கட்டத்தில் தொடர்ந்து பல நடிகர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் உதவி வந்தவர் நடிகர் விஜயகாந்த்!.

விஜயகாந்திற்கு பிறகு அப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு வரவில்லை என்றே கூறவேண்டும். விஜயகாந்தால் நன்மைகள் பெற்ற நடிகர்கள் பலர். அப்படி அவர் மூலம் நடிகர் விவேக்கும் கூட அதிக நன்மைகளை பெற்றுள்ளார்.

இதுக்குறித்து நடிகர் விவேக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஸ்வநாதன் ராம மூர்த்தி திரைப்படத்தில் நான் நடிக்கும்போது அதில் படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்த ஒரு இளைஞனாக நடித்திருந்தேன்.

எனவே அந்த படத்தில் ஒரு நடிகரிடம் விவேக் சென்று கதை சொல்வது போன்ற காட்சி இருந்தது. இதற்காக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களிடம் சென்று கேட்கலாம் என முடிவு செய்தார் விவேக். அதன்படி அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகரிடம் போய் கேட்டார்.

ஆனால் அந்த நடிகர் நான் வீட்டில் கேட்டுவிட்டுதான் சொல்ல வேண்டும் என கூறி சமாளித்து வந்தார். சரி என மற்றொரு நடிகரை சந்தித்தப்போது அந்த நடிகர் நேரடியாகவே நான் நடிக்க முடியாது. என் மார்க்கெட் பெரிதாகி வருகிறது, இப்போது என்னால் சின்ன கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க முடியாது என கூறிவிட்டார்.

இந்த நிலையில் விஜயகாந்திடம் கேட்கலாம் என யோசனை கூறியுள்ளார் தயாரிப்பாளர். சரி என விஜயகாந்திடம் இதை பற்றி கேட்டுள்ளார் விவேக். உடனே விஜயகாந்த் என் வீட்டிலேயே வந்து திரைப்படத்தின் படப்பிடிப்பை எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த காட்சி உடனே படமாக்கப்பட்டது. அப்படியான மனநிலை கொண்டவர் விஜயகாந்த் என தனது பேட்டியில் கூறியுள்ளார் விவேக்.

To Top