Cinema History
40 மாணவர்களை வாழவைத்த விஜயகாந்த்!.. எந்த பிரபலமும் செஞ்சதில்ல!. இன்னும் எத்தனை உதவிகள் பண்ணியிருக்கார்னு தெரியலை!..
Vijayakanth : முந்தைய காலங்களில் சினிமாவில் இப்போது கிடைப்பது போல இயக்குனர் ஆவதற்கான வாய்ப்பு என்பது மிக எளிதாக கிடைத்துவிடவில்லை. ஒவ்வொரு இயக்குனரும் குறைந்தது அதற்கு முன்னால் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தால் மட்டுமே இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
அதே காலகட்டத்தில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான நபர்களும் இருந்தார்கள். ஆனால் அதிகமாக உதவி இயக்குனராக இருந்தால் தான் இயக்குனர் ஆக முடியும் என்கிற நிலை இருந்தது.
இந்த நிலையில்தான் சென்னை திரைப்படக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஒரு கதையை எழுதி அதை குறும்படமாகவும் எடுத்திருந்தனர் அந்தப் படத்தை பெரிய படமாக எடுக்கலாம் என யோசித்த பொழுது பெரும் நடிகர்கள் யாரும் மாணவர்களை நம்பி படம் நடிப்பதற்கு தயாராக இல்லை.
இந்த நிலையில் இந்த கதை விஜயகாந்திடம் வந்தது. கதையை கேட்டதும் விஜயகாந்திற்கு பிடித்திருந்தது. ஆனால் இந்த மாணவர்கள் எப்படி அதை சரியாக எடுப்பார்கள் என்று விஜயகாந்திற்கு தெரியவில்லை ஏனெனில் இயக்குனராக வரும் பலரும் இவ்வளவு இளம் வயதில் இயக்குனர் ஆகவில்லை.
இருந்தாலும் பரவாயில்லை ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த். அப்படி உருவான திரைப்படம் தான் ஊமை விழிகள். வெளியான பிறகு பெரும் வரவேற்பை பெற்றது அந்த திரைப்படம். இதனை அறிந்த விஜயகாந்த் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பெரும் திறமை இருந்தும் கூட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால்தான் படம் எடுக்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொண்டார்.
அதன் பிறகு தொடர்ந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தொடங்கினார் விஜயகாந்த். அவர்களது திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக இப்படி கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான மாணவர்களுக்கு இயக்குனர் ஆவதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒரு விஷயம் இது என்று கூறப்படுகிறது அந்த அளவிற்கு வாய்ப்பு என்பது ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து வைத்திருந்தார் விஜயகாந்த்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்