நீதானடா நடிக்கணும்னு சொன்ன!.. லிவிங்ஸ்டன் செயலால் கடுப்பான விஜயகாந்த்!..

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஓரே வருடத்தில் 18 திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தார். இப்போதுவரை அந்த சாதனையை இன்னொரு நடிகரால் முறியடிக்கவே முடியவில்லை.

அதே போல அதிகமாக புது இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார் விஜயகாந்த். முக்கியமாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் இயக்குனராவதற்கு உதவியவர் விஜயகாந்த்தான்,

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்கள் விஜயகாந்த் நடித்ததுதான். நடிகர் லிவிங்ஸ்டன் பாக்கியாராஜிடம் இருந்து விலகிய பிறகு நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்தார். அப்போது விஜயகாந்திடமும் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தால் கூறவும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் நடிப்பில் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் தயாராக இருந்தது. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டது. எனவே இதற்கு லிவிங்ஸ்டனை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என நினைத்தார் விஜயகாந்த்.

எனவே இதுக்குறித்து லிவிங்ஸ்டனிடம் பேசினார். திடீரென நடிக்க கூப்பிட்டவுடன் லிவிங்ஸ்டனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உடனே விஜயகாந்திடம் சார் எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துவிட்டு சொல்கிறேன் என கூறியுள்ளார்.

இதை கேட்டதும் விஜயகாந்த் கோபமாகிவிட்டார். அவன் அவன் என் படத்தில் வாய்ப்பு கிடைக்காதானு காத்துக்கிட்டு இருக்கான். உனக்கு நானே வாய்ப்பு தரேன். ஆனால் நீ யோசிக்கிறேன்னு சொல்கிறாய். நீதானே நடிக்க வாய்ப்பு வேணும்னு கேட்டாய் என கேட்டுள்ளார் விஜயகாந்த்.

ஆமா சார் ஆனால் திடீரென கேட்டதும் எனக்கு ஒரு முடிவு எடுக்க முடியவில்லை, ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுங்கள் என கூறிவிட்டு தன் நண்பர்களிடம் இதுக்குறித்து கூறியுள்ளார் லிவிங்ஸ்டன். நல்ல வாய்ப்பு விட்டு விடாதே என நண்பர்கள் கூறிய பிறகு அந்த படத்தில் நடித்துள்ளார் லிவிங்க்ஸ்டன்