வடிவேலுக்கிட்ட நான் சொன்னேன்னு  சொல்லு.. கேப்டன் அனுப்பிய செய்தி!.. அரண்டு போன வைகை புயல்!.

கேப்டன் விஜயகாந்த் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த நடிகராவார். தமிழ் சினிமாவில் இப்போது வரை ஒரே வருடத்தில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விஜயகாந்த்.

விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது கவுண்டமணியும் செந்திலும் பெரும் நடிகர்களாக இருந்தும் கூட வடிவேலு அவர்களை மிஞ்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து வடிவேலுவும் வளரும் நடிகரானார். விஜயகாந்துடன் சேர்ந்து தவசி, எங்கள் அண்ணா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அவர்கள் இருவரின் காம்போவிற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால் கட்சி தொடர்பான ஆதரவு என வரும்போது இவர்கள் இருவருக்கும் பிரச்சனை உண்டானது.

Social Media Bar

விஜயகாந்த் அ.தி.மு.க கட்சிக்கும், வடிவேலு தி.மு.க கட்சிக்கும் ஆதரவு அளித்தனர். ஆனால் இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. அதிலும் வடிவேலு விஜயகாந்தை மிக மோசமாக பேசியிருந்தார். இதனால் வடிவேலு சினிமாவிலேயே அடுத்து நடிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சனை நடந்து 3 வருடங்களில் இவை அனைத்தையும் விஜயகாந்த் மறந்தார். வடிவேலு தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் இருப்பது விஜயகாந்திற்கு சங்கடமாக இருந்தது. இதனையடுத்து வடிவேலு கூட நடிக்கும் சக நடிகரை அழைத்த விஜயகாந்த், நான் அவனை மறுபடியும் நடிக்க சொன்னேன்னு போய் சொல்லு என கூறியுள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந்த் தொடர்பாக அந்த நடிகர் தன்னை பார்க்க வருகிறார் என்றதுமே வடிவேலு பயந்துவிட்டார். ஆனால் இறுதியில் விஜயகாந்த் திரும்ப நடிக்குமாறு கேட்டுக்கொண்டார் என அவர் கூறியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் வடிவேலு. அதன் பிறகுதான் அவர் மீண்டும் சினிமாவிற்கு வந்தார்.