News
விஜய்க்கு நெஜமாவே தலையில் முடி இல்லையா!.. தீயாய் பரவி வரும் புது வீடியோ!..
Actor vijay: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படம் துவங்கிய பிறகுதான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றி கழகம் கட்சி துவங்கியது முதலே தொடர்ந்து விஜய் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் பிரபலமாகி வருகின்றன.
கோட் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளானது இலங்கையில் படம் பிடிக்க திட்டமிடப்பட்டது. ஒரு மைதானத்தில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு செல்வது விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என கருதியதால் இலங்கை படப்பிடிப்பு ரத்தானது.

ஐ.பி.எல் கிரிக்கெட் நடக்க இருப்பதால் சென்னை மைதானங்களிலும் அனுமதி கிடைக்காததால் கேரளாவில் கோட் திரைப்படத்தின் இறுதி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே சமூக வலைத்தளங்களில் ஒரே விஜய் பேச்சாகதான் இருந்து வருகிறது.
கேரளாவில் நடக்கும் கோட் படப்பிடிப்பு:
தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் கூட விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே தினசரி அவரை பார்க்க ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். விஜய்யும் கூட படப்பிடிப்புக்கு நடுவே அவர்களை சந்தித்து தினசரி பேசி வருகிறார்.
அவர் அப்படி பேசும் வீடியோக்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் ஒருவரிடம் குனிந்து மாலை வாங்கும் வீடியோ சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ஆமாம் இந்த வீடியோவில் பார்க்கும்போது விஜய்யின் தலைக்கு நடுவே முடி இல்லாதது போல தெரிகிறது. வெகு காலமாகவே விஜய் தலையில் முடி இல்லை அவர் செயற்கையாகதான் முடி வைத்துள்ளார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது, இதுக்குறித்து அவர்கள் கூறும்போது இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று கூறுகின்றனர். வயதாகும்போது முடி உதிர்வது என்பது சகஜமான விஷயம்தான் என்றாலும் கூட பிரபலங்களுக்கு அது நடக்கும்போது பேசுபொருளாகிவிடுகிறது.
