Connect with us

அந்த எழுத்துல முடியுற படம் எல்லாம் தளபதிக்கு ஹிட்டு!.. தளபதி குறித்து சதீஸ் சொன்ன புது சீக்ரெட்!.

vijay

News

அந்த எழுத்துல முடியுற படம் எல்லாம் தளபதிக்கு ஹிட்டு!.. தளபதி குறித்து சதீஸ் சொன்ன புது சீக்ரெட்!.

Social Media Bar

Vijay: அஜித் நடித்த முகவரி திரைப்படத்தில் ஒரு காட்சி ஒன்று பலருக்கும் மறக்காத காட்சியாக இருக்கும். இசையமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகு அஜித் முதல் நாள் இசையமைக்க வரும்பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு விபத்து ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிடுவார்கள்.

இது பார்ப்பதற்கு சாதாரண விஷயமாக தெரிந்தாலும் கூட சினிமாவில் சென்டிமென்ட் என்பது மிகவும் பெரிதாக இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். உதாரணத்துக்கு நடிகர் ரஜினி எப்போதுமே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் தான் தனது திரைப்படங்களுக்கான பூஜையை போடுவார்.

அதே போல நடிகர் அஜித் வ வரிசையில் தனது திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால்தான் அது நல்ல வெற்றி கொடுக்கும் என்று நம்புகிறார். இப்பொழுது வரவிருக்கும் விடாமுயற்சி வரை விவேகம், வீரம், விசுவாசம் வலிமை என்று வா வரிசையில் பெயர் வைத்து வருகிறார் அஜித்.

விஜய்யின் செண்டிமெண்ட்:

இப்படி விஜய்க்கும் ஒரு சென்டிமென்ட் இருப்பதாக காமெடி நடிகர் சதீஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது விஜய்யை பொறுத்தவரை ஆங்கில எழுத்தான ஐ முடியும் வகையில் படத்திற்கு பெயர் வைத்தால் அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும்.

Thalapathy-vijay
Thalapathy-vijay

திருமலை, கில்லி, காதலுக்கு மரியாதை, செந்தூரபாண்டி, கத்தி, தெறி போக்கிரி, சிவகாசி, திருப்பாச்சி போன்ற பல படங்களை ஆங்கிலத்தில் எழுதினால் அவற்றின் கடைசி எழுத்து ஐ என முடியும் இது எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படங்களாக இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் சதீஷ்.

ஆனால் இந்த சென்டிமென்டெல்லாம் பார்த்து விஜய் தனது திரைப்படத்திற்கு பெயர் வைப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அவர் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி கொடுத்த லியோ திரைப்படம் தற்சமயம் நடிக்கும் கோட் திரைப்படம் இவை எதுவுமே ஐ எழுத்தை இறுதி எழுத்தாக கொண்ட திரைப்படங்கள் கிடையாது.

To Top