சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டிய உலக நாயகன்! – கேரளாவில் கல்லா கட்டிய விக்ரம்..

தமிழின் முக்கிய இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து அடுத்து வரவிருக்கும் திரைப்படம் விக்ரம். ஏற்கனவே லோகேஷ் மாஸ்டர், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை அளித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர். சமீப காலமாக விஜய் சேதுபதி பெரிய ஹீரோக்கள் படத்தில் வில்லனாக நடித்து வருவதால் இதிலும் கூட அவர் வில்லனாக இருக்கலாம் என மக்கள் யூகித்து வருகின்றனர்.

ஜூன் 3 அன்று இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பதால் இது நடிகர் ரஜினிக்கு ஒரு பேட்ட திரைப்படம் போல ஃபேன் பாய் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் விக்ரம் திரைப்படம் கேரளாவில் ரூபாய் 7 கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இது ரஜினி நடித்து வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தை விடவும் அதிகமாகும். எனவே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

Refresh