News
செவக்காட்டு சீமையெல்லா.. அனல் பறக்கும் அரசியல் அரிச்சந்திர பாடல்!
உதயநிதி ஸ்டாலின் நடித்து அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள படம் “நெஞ்சுக்கு நீதி”

இந்தியில் வெளியான “ஆர்ட்டிக்கிள் 15” என்ற படத்தில் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக ஒரு சில மாற்றங்களுடன் இந்த படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
அதில் இடம்பெற்ற சமூக நீதி வசனங்கள் பெரும் வைரலாகின. இந்நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான “செவக்காட்டு சீமையெல்லாம்” பாடல் Lyric Video வெளியாகியுள்ளது.
அரிச்சந்திர நாடகம் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். குரு அய்யாதுரை பாடியுள்ள பாடலுக்கு யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.
சாதி பேதம், ஏழ்மை, சமூக நீதி உள்ளிட்டவை குறித்த கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
