உலக நாயகனின் ட்ரெய்லர் உலக சினிமா விழாவில்..! – அப்டேட்னா இப்படி இருக்கணும்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சில காட்சிகளில் கமல்ஹாசனை இளமையாக காட்டுவதற்காக ஹாலிவுட்டிலிருந்து தொழில்நுட்பங்களை வரவழைத்து பயன்படுத்தியுள்ளார்களாம்.

ரஜினி கெரியரையே க்ளோஸ் பண்ணிய படங்கள்! – ஏன் ஓடலை தெரியுமா?

இந்த படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரொமோசன் பணிகளை இப்போதே தொடங்கி விட்டுள்ளார்கள். முன்னதாக விக்ரம் படத்தின் டீசர் மட்டும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வைரலாகியிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Vikram Poster

இந்நிலையில் ட்ரெய்லர் குறித்த அசத்தலான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ரம் படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக திரைப்பட விழாவில் உலக நாயகனின் பட ட்ரெய்லர் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம் கமலுக்காக காத்திருக்கும் சலாமியா நாட்டு இளவரசி! – வேற லெவல் போகும் விக்ரம்!

Refresh