Connect with us

விஜய் படத்துக்கு 2 க்ளைமேக்ஸ் எடுத்தோம்!.. தயாரிப்பாளர் ஒத்துக்கல.. மனம் திறந்த இயக்குனர்!..

vijay

Tamil Cinema News

விஜய் படத்துக்கு 2 க்ளைமேக்ஸ் எடுத்தோம்!.. தயாரிப்பாளர் ஒத்துக்கல.. மனம் திறந்த இயக்குனர்!..

Social Media Bar

Actor Vijay: தமிழில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து பிறகு நாயகனான நடிகர்களில் நடிகர் விஜய் முக்கியமானவர். அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் திரைப்படங்கள் எடுக்கும் பொழுது அதில் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே படங்களில் குழந்தை கதாபாத்திர காட்சிகளை வைப்பாராம்.

முக்கியமாக நிறைய விஜயகாந்த் திரைப்படங்களில் குழந்தை விஜயகாந்தாக விஜய் நடித்திருக்கிறார். அதேபோல நிறைய படங்களில் எஸ் ஏ சந்திரசேகர் கதாநாயகனுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பாராம் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தில் கூட விஜயகாந்திற்கு விஜய் என்றே பெயர் வைத்திருப்பார்.

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்கள் சினிமாவில் நிறைய உண்டு அவற்றில் முக்கியமான திரைப்படம் பூவே உனக்காக. பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகுதான் ஒரு காதல் நாயகனாக விஜய் கொண்டாடப்பட்டார். இத்தனைக்கும் பூவே உனக்காக திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கொஞ்சம் சோதனையாகதான் முடிந்திருக்கும்.

இது குறித்து அந்த படத்தின் இயக்குனர் விக்ரமன் பேட்டியில் கூறும் பொழுது முதன் முதலில் அந்த படத்திற்கு கதை எழுதும் பொழுது நான் அந்த கிளைமாக்ஸை வைக்கவில்லை. இறுதியில் அவர் சங்கீதாவுடன் சேர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் விஜய்யையே அந்த குடும்பம் தனது பேரனாக ஏற்று கொண்டதாகவும்தான் கதையை எழுதியிருந்தேன்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் சேராமல் இருந்தால்தான் அந்த படம் நன்றாக இருக்கும். அப்போதுதான் உண்மை காதலுக்காக விஜய் இவ்வளவையும் செய்தார் என்பது நம்பும்படியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதன்படியே விக்ரமன் கிளைமாக்ஸை மாற்றி இருக்கிறார் ஆனால் சோகமான கிளைமாக்ஸுக்கு மாற்றிய பிறகும் கூட அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.

To Top