Connect with us

ஐஸு நிக்சன் பண்றது சரி கிடையாது… என் அம்மா அப்பா அப்படி வளர்க்கலை!.. கோபத்தில் பேசிய வினுஷா!..

vinusha bigboss

Tamil Cinema News

ஐஸு நிக்சன் பண்றது சரி கிடையாது… என் அம்மா அப்பா அப்படி வளர்க்கலை!.. கோபத்தில் பேசிய வினுஷா!..

Social Media Bar

biggboss tamil vinusha: இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது முதலே கடுமையான சண்டைகள் அதிகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் பொழுதும் அதற்கான ஒரு ஹேட்டர்ஸ் குழுவும் உருவாகி இருக்கும்.

அவர்கள் பிக் பாஸ் தொடரை வெகுவாக வெறுப்பார்கள். ஆனால் இந்த முறை பிக் பாஸை வெறுப்பவர்களின் கூட்டம் அதிகரித்திருப்பதாக பேசப்படுகிறது. ஏனெனில் முன்பிருந்த அளவிற்கு விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ அதிகமாக இல்லாத காரணத்தினால் போட்டியாளர்கள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யும் வார்த்தைகளை பயன்படுத்துவது போல தெரிவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போன வாரம் டபுள் எலிமினேஷனில் சீரியல் நடிகை வினுஷா நீக்கப்பட்டார். அவர் தற்சமயம் பேட்டியில் பேசும்பொழுது அந்த வீட்டில் எல்லா விஷயத்தைமே கண்டெண்டாகதான் செய்கிறார்கள் என்று பேசி இருந்தார். அப்பொழுது அவரிடம் ஐஸ்வர்யா மற்றும் நிக்சனின் காதல் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வினுஷா, ஐஸ்வர்யா மற்றும் நிக்சன் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை ஏனெனில் பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை அங்கு அவர்கள் செய்வது எல்லாமே மக்களை குஷிப்படுத்துவதற்காகதான் என்பதால் அதற்காக அவர்கள் அப்படி நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் உங்களை குறித்து அவதூறாக பேசியவர்களிடம் நீங்கள் திரும்ப சண்டையிடாமல் ஏன் இருந்தீர்கள் நீங்கள் சண்டையிட்டு இருந்தால் மக்களுக்கும் அது விறுவிறுப்பாக இருந்திருக்கும். எனவே உங்களை எலிமினேட் செய்திருக்க மாட்டார்கள் அல்லவா. என்று கேட்ட பொழுது இல்லை அப்படி எங்கள் வீட்டில் என்னை வளர்க்கவில்லை எனக்கு தேவையில்லாமல் சண்டை போடத் தெரியாது. நடிக்க தெரியாது அதனாலதான் பிக் பாஸிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் வினுஷா..

To Top