தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஷால். சில காலங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாமலே இருந்தது. ஆனால் தற்சமயம் வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
அதனை தொடர்ந்து மீண்டும் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் விஷால். இந்த நிலையில் அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறியுள்ளார் விஷால். அதாவது தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்களுக்கு இருக்கும் மதிப்பு சின்ன பட்ஜெட் படங்களுக்கு இருப்பதில்லை.
இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் முற்றிலும் வரவேற்பை இழந்துள்ளன. பல படங்கள் குறைந்த முதலில் எடுக்கப்பட்டு இன்னமும் வெளியாகாமலே இருக்கின்றன. எனக்கு தெரிந்தே 200க்கும் அதிகமான படங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இனிமேல் 4 அல்லது 5 கோடி பட்ஜெட்டில் எல்லாம் படம் எடுக்காதீர்கள் என கூறியுள்ளார் விஷால். ஆனால் இப்படி சொல்வது சரி கிடையாது. சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.






