Tamil Cinema News
இப்போ அது நடக்கல.. விஷால் வெளியிட்ட வீடியோ… ஆனாலும் தெளிவு இல்லை.
தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர். அவரது நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. அந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட விஷால் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் கையில் மைக் வைத்து பேசும்போது அவர் கை மிகவும் நடுங்கியது.
அதனை பார்த்த பலரும் விஷால் மிகப்பெரும் உடல் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளார் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் விஷால் கடுமையான நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதனால்தான் அவர் கை நடுக்குவதாகவும் அவர் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பேட்டியில் பேசினார் விஷால். அதில் அவர் கூறும்போது கடந்த ஒரு வாரத்தில் என்னை பற்றிதான் பேச்சுக்கள் இருந்தன. ஏதோ மைக்கை பிடித்தாலே என் கை நடுங்குகிறது என்று பேசினார்கள். இப்போது பாருங்கள் என் கை எவ்வளவு ஸ்டெடியாக இருக்கிறது என்று.
அதே போல நிறைய பேர் எனது ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து கேட்டு வந்தனர். என் மீது பிரியமுள்ள நபர்கள் இவ்வளவு பேர் உள்ளனர் என அப்போதுதான் தெரிந்தது என கூறியிருந்தார் விஷால்.
ஆனாலும் அவரது குரலில் பெரிதாக தடுமாற்றம் இருப்பதை பார்க்க முடிந்தது.
