Tamil Cinema News
எந்த சமரசமும் இருக்காது.! பராசக்தி டைட்டில் பிரச்சனைக்குள் வந்த விஷால்..
தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி தயாராகி வரும் திரைப்படம் சுதா கொங்காரா.
சுதா கொங்காரா இயக்கும் திரைப்படம் என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. அதன்படி தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் படத்தின் டீசர் வெளியானது.
இரண்டிலுமே பராசக்தி என்கிற பெயரில்தான் டீசர் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சக்தி திருமகன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படம் தமிழில் மட்டுமே சக்தி திருமகன் என்கிற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளிலும் இந்த படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான உரிமத்தையும் விஜய் ஆண்டனி வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய விஷால் இதுக்குறித்து நாசர் சாருடன் கலந்து பேச உள்ளோம். விஜய் ஆண்டனிதான் தமிழை தவிர்த்து மற்ற நான்கு மொழிகளிலும் பதிவு செய்திருக்கிறார். எனவே காம்ப்ரமைஸாக செல்வதுதான் நல்லது என கூறியுள்ளார் விஷால்.
மேலும் பதிவு செய்ததில் யார் முன்னிலையில் இருக்கின்றனர் என்பதை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் விஷால்.
