இப்பதான் என்ன அடிச்சி விட்டுருக்கானுங்க.. மக்கள் குறித்து மேடையில் பேசிய வி.ஜே சித்து..!
ப்ராங்க் வீடியோக்கள் செய்ததன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்தவர் வி.ஜே சித்து. ஆரம்பத்தில் ப்ளாக் ஷீப் என்னும் யூ ட்யூப் சேனலில் இவர் பணிப்புரிந்து வந்தார். அங்கு அவர் செய்து வந்த கேலி வீடியோக்களே அதிக பிரபலமாகி வந்தது.
அதற்கு பிறகு சில திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தாலும் கூட பெரிதாக அவருகு அது வரவேற்பை பெற்று தரவில்லை. பிறகு தனியாக வி.ஜே சித்து விலாக்ஸ் என்கிற சேனல் ஒன்றை துவங்கினார் சித்து. அதில் அவர் போட்ட விடீயோக்கள் அதிக பிரபலமடைந்தன.
இதனை தொடர்ந்து வி.ஜே சித்துவின் மாத வருமானமே லட்சங்களை தொட்டு வந்தது. இந்த நிலையில் அடுத்து வி.ஜே சித்து டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதன் தான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதற்கு நடுவே வி.ஜே சித்து தனது நண்பர் ஒருவரை அடிப்பதாக வெளியான வீடியோ அதிக சர்ச்சையானது. ஜாலிக்காக என்றாலும் இப்படியெல்லாம் ஒருவரை அடிப்பது சரி கிடையாது என மக்கள் பேச துவங்கினர்.
இந்நிலையில்தான் சமீபத்தில் இவர் டிராகன் திரைப்படத்தின் விழாவில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அதில் பலருக்கும் நன்றி தெரிவித்த வி.ஜே சித்து பேசும்போது படத்தில் பலரும் எனக்கு உதவியுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே நன்றி.
ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி நன்றி சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அதில் யாரையாவது நான் தவற விட்டுவிட்டேன் என்றால் அதற்கு என்னை போட்டு அடிப்பார்கள். இப்போதுதான் ஒரு அடி வாங்கிவிட்டு வந்துள்ளேன் என பேசியிருந்தார் வி.ஜே சித்து.
ஆனாலும் கூட இப்போது வரை ஏன் வி.ஜே சித்து தனது தவறை உணரவில்லை என இதுக்குறித்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.