Connect with us

எம்.ஜி.ஆர் உதவி எனக்கு தேவையில்லை!.. ஸ்டிரிக்டாக மறுத்த வி.எஸ் ராகவன்.. இதுதான் காரணம்!.

MGR vs raghavan

Cinema History

எம்.ஜி.ஆர் உதவி எனக்கு தேவையில்லை!.. ஸ்டிரிக்டாக மறுத்த வி.எஸ் ராகவன்.. இதுதான் காரணம்!.

Social Media Bar

தமிழ் நடிகர்கள் அனைவராலும் வள்ளல் என அழைக்கப்படுபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த சமகாலத்தில் நடிகர்களுக்காக பல நன்மைகளை செய்துள்ளார். உதாரணமாக கோடம்பாக்கம் பகுதிக்கு அந்த காலகட்டத்தில் பேருந்தே கிடையாது.

அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனவுடன் அந்த பகுதிக்கு பேருந்து விட்டார். அந்த அளவிற்கு நடிக்கும் கலைஞர்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் பலர் எம்.ஜி.ஆருடன் நண்பர்களாக இருந்தனர்.

அதில் முக்கியமானவர் வி.எஸ் ராகவன், இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனோடு பல திரைப்படங்களில் அப்போது நடித்துள்ளார். ஒருமுறை அவரது மனைவிக்கு மிகுந்த உடல்நிலை கோளாறு ஏற்பட்டது மருத்துவமனையில் அதிக கட்டணம் கட்ட வேண்டி இருந்தது.

ஆனால் அப்போது அவரிடம் காசு இல்லை. அவர் சில இடங்களில் தெரிந்தவர்களிடம் பணம் கேட்டிருந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் உடனே பணம் கொடுத்து அனுப்பி அதை வி.எஸ். ராகவனிடம் கொடுக்க சொன்னார்.

ஆனால் வி.எஸ் ராகவன் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார். ஏனெனில் வேறு ஒருவர் ஏற்கனவே அவருக்கு அந்த பணத்தை கொடுத்திருந்தார். எனவே உதவி தேவைப்படும் இன்னொரு நபருக்கு இந்த பணத்தை கொடுக்க சொல்லுங்கள் என எம்.ஜி.ஆரிடமே திரும்ப அந்த பணத்தை கொடுத்து விட்டார் வி.எஸ் ராகவன்.

இது எம்.ஜி.ஆருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஏனெனில் தகுந்த நேரத்தில் நண்பனுக்கு பணம் தேவைப்பட்ட பொழுது தன்னால் அதை கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று எண்ணி அவர் வருந்தினார்.

To Top