ரத்த காட்டேரி, ஓநாய் மனிதர்கள் என நிரம்பி வழியும் கதை? – வெனஸ் டே சீரிஸ் விமர்சனம்

ஹாலிவுட்டில் பிரபலமான திகில் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் டிம் பர்ட்டன். இவர் ஜானி டெப்பை வைத்து நிறையை த்ரில்லர் திரைப்படங்களை இயக்கியுள்ளர்.

இறுதியாக குழந்தைகள் விரும்பும் வகையில் டம்போ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் அவர் இயக்கத்தில் வெளியான நெட்ப்ளிக்ஸ் சீரிஸ்தான் வெனஸ் டே.

ஆடம் ஃபேமிலி (Adam Family) என்கிற படத்தின் தொடர்ச்சியாக இந்த வெனஸ் டே சீரிஸ் அமைந்துள்ளது. படத்தின் கதைப்படி இந்த ஆடம் குடும்பத்தின் அடுத்த வாரிசாக பிறப்பவர்தான் வெனஸ் டே.

வெனஸ்டே வித்தியாசமான சூனியகாரியாக இருக்கிறார். யாரிடமும் அதிகம் பேசாத ஒரு நெகட்டிவ் கதாபாத்திரமாக இருக்கிறார். எந்த ஒரு பள்ளியிலும் கொஞ்ச நாட்கள் கூட நீடிக்காத வெனஸ்டே, இறுதியாக நெவர்மோர் அகாடமி என்கிற பள்ளிக்கு வருகிறார்.

சூனியகாரர்கள், இரத்தக்காட்டேரிகள், ஓநாய் மனிதர்கள் போன்ற வித்தியாசமானவர்களுக்கான பள்ளிதான் இந்த நெவர்மோர் அகாடமி. நெவர்மோர் அகாடமிக்கு அருகில் உள்ள காட்டில் வினோதமான முறையில் அடிக்கடி கொலைகள் நடக்கின்றன.

நெவர் மோருக்கு வரும் வெனஸ்டே அதை துப்பறிய துவங்குகிறார். குற்றவாளியை அவர் எப்படி கண்டறிகிறார் என்பதே கதை. சுறு சுறுப்பான கதைக்களத்தை கொண்ட இந்த சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ் மொழியில் கிடைக்கிறது.

Refresh