Connect with us

விசித்திரா பாலியல் பிரச்சனை பத்தி கமல் கேட்கமாட்டார்… ஏன்னா கமலுக்கு அதில் பிரச்சனை இருக்கு!.. இது வேறயா?..

vichitra kamalhaasan

Bigg Boss Tamil

விசித்திரா பாலியல் பிரச்சனை பத்தி கமல் கேட்கமாட்டார்… ஏன்னா கமலுக்கு அதில் பிரச்சனை இருக்கு!.. இது வேறயா?..

Social Media Bar

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையில் வைக்கப்பட்ட ஒரு போட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மோசமான நிகழ்வுகளை விவரிக்கும்படி ஒரு பேட்டியில் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களுமே அவர்களது வாழ்க்கையில் சந்தித்த மோசமான விஷயத்தை பற்றி கூறி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நடிகை விசித்திராவும் அதில் பேசினார். அதில் அவர் பேசும்போது ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் நடிக்க சென்ற போது அங்கு நடிகர் மற்றும் பட குழுவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறினார்.

vichitra
vichitra

அதன் பிறகு தனக்கு எங்குமே நியாயம் கிடைக்காததால் அவர் சினிமாவை விட்டே விலகிவிட்டதாக கூறியிருந்தார். இந்த கொடுமையான நிகழ்வை கேட்டதில் இருந்து ரசிகர்கள் யார் அந்த கதாநாயகன் என தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி தெலுங்கில் பிரபல நடிகரான பாலகிருஷ்ணாதான் இந்த விஷயத்தை செய்தது என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணாவை சமூக வலைத்தளத்தில் கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது உண்மையாகவே இந்த நிகழ்வில் பாலகிருஷ்ணா சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் அதுக்குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்.

ஏனெனில் அது அவரது சினிமா வாழ்க்கையை பாதிக்கும். அவரது திரைப்படங்கள் தெலுங்கில் ஓடுவது கடினமாகிவிடும் என அவர் யோசிப்பார். என இந்த நிகழ்வு குறித்து பிஸ்மி கூறியிருந்தார். சனி கிழமை நிகழ்ச்சியில்தான் தெரியும் பிஸ்மி சொல்வது உண்மையா? அல்லது பொய்யா? என்பது..

To Top