Tamil Cinema News
லைக்கா செய்த அந்த தவறு.. பதிலுக்கு வச்சி செய்யும் அஜித்?.. இதுதான் நிலவரமா?
இந்த வருட துவக்கத்தில் இருந்து லைக்கா தயாரித்த நான்கு திரைப்படங்களின் மீதுதான் அவர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் அந்த திரைப்படங்கள் திரைக்கு வருவதன் மூலம் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று லைக்கா நிறுவனம் நம்பி வந்தது.
ஆனால் அப்படி வெளியான இரண்டு திரைப்படங்கள் அவர்களுக்கு தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்தன. அதில் முதல் திரைப்படம் ஜனவரியில் வெளியான லால் சலாம் திரைப்படம். பெருந்தோள்வியை பெற்றுக் கொடுத்தது.
அதனை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படமும் அவர்களுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த நிலையில் வைக்கா நிறுவனம் மலைபோல் நம்பி இருந்த திரைப்படங்கள் வேட்டையன் மற்றும் விடாமுயற்சி திரைப்படங்கள் தான்.
அஜித் லைகா பிரச்சனை:
வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகி எதிர்பார்த்ததை விடவும் நல்ல வசூலை பெற்று கொடுத்தது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
அடுத்த பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படத்திற்கான சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அதற்கு அஜித் ஒரு பத்து நாளாவது கால் சீட் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அஜித் தொடர்ந்து அந்த கால் சீட்டை கொடுக்காமல் மறுத்து வருகிறார். டிசம்பர் மாதம்தான் கால் சீட்டை கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். இதனால் விடாமல் முயற்சி செய்தும் விடாமுயற்சி பொங்கலுக்கு வருவதும் சந்தேகம்தான் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
லண்டனில் நடிகர் அஜித் அவருக்கான சொத்து வாங்கும் பொழுது லைக்கா நிறுவனத்திற்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் அஜித் தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் இருந்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.
