Connect with us

மனைவியின் இடுப்பை பிடித்தவனை ஒன்றும் கேட்காமல் இருக்கிறீர்களே!.. ஸ்னேகா விவகாரத்தில் பாபா பாஸ்கர் செஞ்ச வேலை!.

actress sneha

News

மனைவியின் இடுப்பை பிடித்தவனை ஒன்றும் கேட்காமல் இருக்கிறீர்களே!.. ஸ்னேகா விவகாரத்தில் பாபா பாஸ்கர் செஞ்ச வேலை!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் அனைவராலும் புன்னகைக்கரசி என அன்பாக அழைக்கப்படுபவர் நடிகை ஸ்னேகா. தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் பல நடிகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தப்போது பாரம்பரிய ஆடைகளை உடுத்தியும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெறலாம் என நிரூபித்தவர் ஸ்னேகா.

அதனாலே அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் பின்னாட்களில் புதுப்பேட்டை, சிலம்பாட்டம் போன்ற படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ஸ்னேகாவின் பழைய ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

sneha
sneha

இப்போது சினேகாவிற்கு சினிமாவில் பெரிதாக மார்க்கெட் இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் ஜி தமிழில் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் ஸ்னேகா. சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் தங்க தாமரை நிலவே என்கிற பாடலுக்கு ஆடிய இளைஞன் அந்த பாடலுக்கு ஸ்னேகாவுடன் ஆட ஆசை என விருப்பம் தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா பாஸ்கர் அதுக்கென்ன இப்போது கூட ஆடலாம் என கூறவும் ஸ்னேகாவும் அவருடன் ஆட சென்றார். அப்போது அந்த இளைஞர் ஸ்னேகாவின் புடவைக்குள் கையை விட்டு இடுப்பை பிடித்து கொஞ்சம் நெருக்கமாகவே ஆடினார். இது பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது போதாது என்று அவரை கையில் தூக்கி ஆடுமாறு பாபா பாஸ்கர் கூற அடுத்து அந்த இளைஞனும் அவ்வாறே செய்தான். இதனையடுத்து அந்த வீடியோ வைரலானது. முதலில் ஸ்னேகாவை திட்டி வந்த பலரும் பிறகு இதற்கு பாபா பாஸ்கர்தான் முக்கிய காரணம்.

அவர்தான் ஸ்னேகாவை மேலே ஏற்றிவிட்டார் என குற்றம் சாட்டி வந்தனர். மேலும் பலர் இதற்கு பிரசன்னாவின் பதில் என்ன என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுக்குறித்து பிரசன்னா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே பிரசன்னாவையும் சேர்த்து விமர்சனம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்,

To Top