மஞ்சுமெல் பாய்ஸ் குழு இளையராஜாவை சந்திக்காததற்கு இதுதான் காரணம்!.. தட்டி தூக்க ப்ளான் போட்ட இளையராஜா..

Manjummel Boys: மலையாள திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த மாதம் வெளியான இரண்டு மலையாள திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதில் முதலாவது மம்முட்டி நடித்த பிரம்மயுகம். முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து வெளியான திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.

manjummel boys
manjummel boys
Social Media Bar

கேரளாவில் இருந்து சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு கிளம்பி வந்தப்போது கொடைக்கானலில் அவர்களுக்கு நடந்த விபத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதை செல்கிறது. இந்த திரைப்படம் உண்மையாக நடந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இளையராஜாவை சந்திக்காத படக் குழுவினர்:

குணா படத்தில் வரும் குகையை பார்க்க போய்தான் இந்த விபத்தே ஏற்படும். எனவே குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்கிற பாடலை படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் அவர்களை அழைத்து அந்த படத்திற்காக பாராட்டியிருந்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனிடம் எல்லாம் பாராட்டை வாங்கினாலும் கூட படக்குழு இப்போது வரை இளையராஜாவை சந்தித்து இதற்காக வாழ்த்து சொல்லவில்லையே என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இந்த கேள்விக்கு பதிலளித்த பிரபல சினிமா பிரபலமான சித்ரா லெட்சுமணன் கூறும்போது ஒருவேளை அவர்கள் இளையராஜாவை சந்தித்திருக்கலாம்.

ஆனால் அதை இளையராஜா வெளியிடாமல் இருக்கலாம் என கூறுகிறார். ஆனால் ஒருவேளை அவர்கள் இளையராஜாவை சந்திக்காத பட்சத்தில் இளையராஜா அந்த பாடலுக்காக காப்புரிமை வழக்கு போட்டு அவர்களிடம் இழப்பீடு பெறவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.