News
கூடா நட்பு கேடாய் முடியும்… தவறான நட்பால் சினிமாவை விட்டு போன ஸ்ரீ திவ்யா.. பின்னால் நடந்த கதை..!
தமிழில் வந்த வேகத்திற்கு வரவேற்பை பெற்ற ஒரு நடிகை என்றால் அது நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள் தான். அவர் உயரம் குறைவாக இருந்தாலும் கூட பார்ப்பதற்கு பள்ளி பெண்மணியாக தெரிவதால் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவருடைய கதாபாத்திரம் என்பது சிறப்பானதாக அமைந்தது.
அந்த திரைப்படம் ஸ்ரீ திவ்யாவுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தமிழ்நாடு முழுவதுமே அந்த படத்தின் மூலமாக வரவேற்பை பெற்றார் ஸ்ரீ திவ்யா. அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படமே வெற்றி:
தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தின் மூலமாக வெற்றி கிடைத்ததால் அடுத்தும் சிவகார்த்திகேயன் உடனே சேர்ந்து காக்கிச்சட்டை திரைப்படத்திலும் நடித்தார்.

பிறகு இளம் நடிகர்கள் அனைவருமே ஸ்ரீ திவ்யா அவர்கள் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டினர் ஏனெனில் ஸ்ரீ திவ்யாவுக்கு என்று தனி மார்க்கெட் உருவாகி இருந்தது. தொடர்ந்து நிறைய இளம் நடிகர்களுடன் நடித்து வந்ததால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார்.
ஈட்டி, ஜீவா திரைப்படங்களில் எல்லாம் சிறப்பான கதாபாத்திரத்தில் ஸ்ரீ திவ்யா நடித்து வந்தார். இப்படி எல்லாம் இருந்தும் கூட திடீரென்று அவர் சினிமாவை விட்டு காணாமல் போனார். ஏன் இப்படி நடந்தது என்பது பலருக்கும் சந்தேகமாக இருந்தது.
மதுவால் வந்த பிரச்சனை:
ஏனெனில் இந்த அளவிற்கு வாய்ப்பு உள்ள ஒரு நடிகை எதற்கு சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று யோசிக்கும் பொழுது அவர் சினிமாவில் சிலருடன் நட்பில் இருந்த பொழுது அவர்களால் மதுவுக்கு அடிமையாக துவங்கியிருக்கிறார் ஸ்ரீ திவ்யா.

ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமாக மது அருந்த துவங்கிய ஸ்ரீ திவ்யா படப்பிடிப்பு தளங்களுக்கு கூட மது அருந்திவிட்டே வந்திருக்கிறார். வந்தது மட்டுமல்லாமல் படப்பிடிப்புகளிலும் ஒழுங்காக நடிக்காமல் இருந்திருக்கிறார்.
இந்த விஷயம் காட்டுத் தீ போல திரைத்துறையில் பரவ துவங்கியதும் தயாரிப்பாளர்கள் ஸ்ரீ திவ்யா நம் படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளும் இல்லாமல் போனது. இந்த நிலையில் மீண்டும் மதுவிலிருந்து மீண்ட ஸ்ரீ திவ்யா தற்சமயம் திரைத்துறையில் வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் என்று கூறப்படுகிறது.
