Connect with us

இர்ஃபான் A2D சேனலால் தற்கொ*க்கு முயன்ற யூ ட்யூப்பர்.. லைவ் வீடியோவால் சர்ச்சை!..

a2d youtube

News

இர்ஃபான் A2D சேனலால் தற்கொ*க்கு முயன்ற யூ ட்யூப்பர்.. லைவ் வீடியோவால் சர்ச்சை!..

Social Media Bar

YouTuber Biriyani Man: தற்பொழுது சினிமா பிரபலங்களை விட சமூக வலைத்தளங்களில் உள்ள நபர்கள் தான் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்கள் மூலமும், யூடியூப் மூலமும் பிரபலமானவர்கள் பலர். தற்பொழுது சினிமா வாய்ப்புகள் முதல், கடை திறப்பு விழாக்கள் போன்ற இடங்களில் முன்னணி நபர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது youtube சமூக வலைத்தளங்களை திறந்தாலே பிரியாணி மேன் பற்றிய பேச்சுகள் தான் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அவர் நேரலையில் தற்கொலைக்கு முயன்றது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக இருக்கிறது. யார் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரியாணி மேன்

தற்பொழுது youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் பிரியாணி மேன் என்ற சேனல், அவர் பல யூடியூப்பர்கள் டார்கெட் செய்து அவர்கள் மீது உள்ள சர்ச்சையை பயன்படுத்தி வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் டார்கெட் செய்த முதல் நபர் youtube -இல் பிரபலமாக இருக்கும் இர்ஃபான் மற்றும் டைலர் அக்கா.

முதலில் அவர் யூடியூப்பர் இஃபார்ன். அவரை பற்றி பேசும்பொழுது பல சர்ச்சையான கருத்துக்களை முன்வைத்து பேசினார். முதலாவதாக இஃபார்ன் ஃபுட் ரிவ்யூ என்ற பெயரில் தர மற்ற உணவகங்களின் உணவுகளை சாப்பிட்டு நல்லா இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அந்த உணவுகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து தரமற்றது என கூறினார்கள். இவர் பணத்தை வாங்கிக் கொண்டு இவ்வாறெல்லாம் கூறி வருகிறார் என பேசினார்.

biriyani man

அதன் பிறகு யூடியூப்பர் இஃபார்ன் தனது காரை ஏற்றி மூதாட்டி ஒருவரை கொன்ற வழக்கும் உள்ளது. ஆனால் அவருக்கு இருக்கும் பண பலத்தை வைத்து அதிலிருந்து அவர் தப்பித்து விட்டார். இவ்வாறு பிரியாணி மேன் யூடியூப்பர் இஃபார்ன் பற்றி குற்றம் சாட்ட, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இர்ஃபான் பிரியாணி மேன் கூறிய அனைத்தும் பொய். அவர் ஒரு முட்டாள் என ஆதாரங்களுடன் தன் மீது சுமர்த்தப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவ்வாறாக இருவரின் பிரச்சனையும் அனல் பறந்த நிலையில், இவர் டைலர் அக்காவையும் விடவில்லை ஏனென்றால் டெய்லரிங் என்ற பெயரில் இவர் ஆபாசமான வீடியோக்கள் பதிவிடுகிறார். மேலும் இவர் மோசடி செய்து வருவதாகவும் டைலர் அக்கா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார்.

தற்கொலைக்கு முயற்சி

biriyani man

இவ்வாறாக சண்டை முற்றிய நிலையில் பிரியாணி மேன் பற்றி A2D சேனல் இவர் கூறுவது அனைத்தும் பொய் என டைலர் அக்காவிற்கு சப்போர்ட் செய்து பேசினார். A2D சேனல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த நிலையில் பிரியாணி மேன், நேற்று யூடியூப் நேரலையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக துப்பட்டா ஒன்றை எடுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரின் அம்மா வந்து காப்பாற்றி விட்டார்.

அவர் இந்த youtube எல்லாம் உனக்கு வேண்டாம் என திட்டி அவரை தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்தார். இவர் இவ்வாறு செய்ததும் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக பலரும் பல கமெண்ட்கள் செய்து வந்தாலும், இது எல்லாம் ஸ்கிரிப்ட் என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top