யுவனின் அடுத்த ப்ரோஜக்ட்… ரியோ ராஜ் கூட்டணியில் அடுத்த காதல் படம்.!
தமிழில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக யுவன் சங்கர் ராஜா இருந்து வருகிறார். இளையராஜாவின் மகன் என்றாலும் கூட யுவன் சங்கர் ராஜா தனது தந்தை போலவே இசையமைக்காமல் ஏ ஆர் ரகுமான் மாதிரி புதிய இசைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.
இப்பொழுது வரை மெலோடி பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா தனித்துவமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் யுவன் சங்கர் ராஜா.
பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் படங்களாகவே இருக்கும். ஏற்கனவே அவர் தயாரித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அடுத்து அவர் இன்னொரு திரைப்படம் தயாரிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஸ்வீட் ஹார்ட் என்று பெயரிட்டு இருக்கின்றனர். எனவே இந்த திரைப்படமும் காதல் திரைப்படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கதாநாயகனாக ரியோ ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார். நடிகர் ரியாராஜ்க்கு ஏற்கனவே ஜோ மாதிரியான காதல் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுப்பதால் இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன.