கூட வந்தவரை அனுப்பிட்டு வர்ரேன்.. வாலியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..
MGR Vaali: தமிழ் திரை துறையில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் வாலி தன்னுடைய இளமை காலகட்டத்திலேயே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்துவிட்டார் வாலி. ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தாலும் அவருடைய திறமையை வெளிக்காட்டி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார்.
வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர் எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பில் இருந்தார். எம்.ஜி.ஆரும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடல் வரிகளை எழுதும் வாய்ப்பை அதிகமாக வாலிக்கு அளித்து வந்தார். இந்த நிலையில் ஒருமுறை எம்.ஜி.ஆர் அவரது வீட்டிற்கு விருந்து உண்பதற்கு வாலியை அழைத்து இருந்தார்.

பொதுவாக தினமும் பல பேருக்கு சாப்பாடு போடுவது எம்.ஜி.ஆருக்கு வழக்கமாகும். அப்படி சாப்பாடு சாப்பிட வருபவர்களோடு சேர்ந்து அமர்ந்துதான் எம்.ஜி.ஆர் சாப்பிடுவார். இதற்காக அவர் வாலியை அழைத்த பொழுது வாலியும் வந்து எம்.ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்தார்.
அப்போதுதான் வாலி ஒரு விஷயத்தை யோசித்தார். அவர் கூட வந்த உதவியாளரை காரின் அருகிலேயே நிற்க வைத்துவிட்டு வந்துவிட்டார் வாலி. எனவே அவர் எம்.ஜி.ஆரிடம் எனது உதவியாளனை அருகில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதனை கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் அப்படியே இருங்கள் நான் போய் உங்கள் உதவியாளனை பார்க்கிறேன் என்று கூறிவிட்டு வேகமாக சென்ற எம்.ஜி.ஆர் அந்த உதவியாளனையும் அழைத்து வந்து அவருக்கும் எம்.ஜி.ஆருக்கு அருகிலேயே சாப்பாடு போட்டு அமர வைத்தார். அப்படிப்பட்டவர்தான் எம்.ஜி.ஆர் என்று தனது பேட்டியில் கூறி இருக்கிறார் வாலி.