நீ நடிக்கிற படத்துக்கெல்லாம் காசு தர முடியாது!.. பாண்டியராஜனை ஓரம் கட்டிய தயாரிப்பாளர்கள்.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் மாஸ்!..

இயக்குனர் பாக்கியராஜிடம் பணிப்புரிந்த பல உதவி இயக்குனர்கள் பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டனர். அந்த வகையில் பாக்கியராஜிற்கு பிறகு அவரை போலவே கதாநாயகனாகவும், இயக்குனராகவும் தங்களது பயணத்தை தொடர்ந்தவர்கள் இயக்குனர் பார்த்திபனும், பாண்டியராஜனும்தான்.

பாக்கியராஜுடம் பணிப்புரிந்தப்போது பார்த்திபனும் சரி, பாண்டியராஜனும் சரி இருவருமே குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் எடுப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டனர். இதனையடுத்து தனியாக படம் எடுப்பதற்காக முயற்சி செய்தார் பாண்டியராஜன்.

இந்த நிலையில் நடிகர் பிரபுவை வைத்து தனது முதல் படமான கன்னி ராசி திரைப்படத்தை இயக்கினார் பாண்டியராஜன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் பாண்டியராஜனுக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது.

Social Media Bar

இதனை தொடர்ந்து அவர் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க போவதாக அறிவித்தார். அதற்காக ஒரு கதையை எழுதிய பாண்டியராஜன் பல தயாரிப்பாளர்களை நாடி அந்த கதையை கூறினார். ஆனால் பாண்டியராஜன் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தால் எந்த தயாரிப்பாளரும் அவரது படத்தை தயாரிக்க முடியாது என்றனர்.

எனவே அவர் படத்தில் இரண்டு கதாநாயகன்கள் உள்ளது போல கதையை மாற்றி அமைத்தார். அதில் முக்கிய கதாநாயகனாக பாண்டியனையும், இரண்டாவது கதாநாயகனாக அவரையும் வைத்து ஆண்பாவம் திரைப்படத்தின் கதையை எழுதினார்.

அப்போது பாண்டியன் பிரபலமாக இருந்ததால் அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் கிடைத்தனர். ஆனால் அந்த படம் வெற்றி அடைந்தப்போது பாண்டியனை விட பாண்டியராஜன்தான் அதிகமாக பேசப்பட்டார்.