நடிகையை கட்டிப்பிடிக்க பல லட்சங்கள் செலவு செய்த வடிவேலு!.. இப்படியும் நடந்துச்சா!..
Actor Vadivelu : தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. அதே சமயம் மக்கள் மத்தியில் அதிக விமர்சனம் பெற்ற ஒரு காமெடி நடிகராகவும் இவர் இருக்கிறார். எப்போது விஜயகாந்தை விமர்சித்து வடிவேலு பேச துவங்கினாரோ அப்போது முதலே மக்களுக்கு வடிவேலு மீது இருந்த அன்பு குறைந்துவிட்டது என கூறலாம்.
அரசியல் ஆதாயத்திற்காக மேடைகளில் விஜயகாந்தை மிகவும் மோசமாக பேசி வந்தார் வடிவேலு. இதனால் மக்கள் அவரை வெறுக்க துவங்கினர். இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு வடிவேலுவிற்கு பட வாய்ப்பே கொடுக்க கூடாது என முடிவு செய்தனர் சினிமா துறையினர்.

இதனால் வெகு காலம் சினிமாவை விட்டு சென்ற வடிவேலு திரும்ப வரும்போது அவருக்கு முன்பிருந்த வரவேற்பு இருக்கவில்லை. இந்த நிலையில் அவருடன் பணிப்புரிந்தவர்களும் அவரை குறித்து அவதூறு செய்திகளை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் வடிவேலு குறித்து ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். அதாவது நடிகை ஸ்ரேயா மீது வடிவேலுவிற்கு வெகு நாட்களாக ஆசை இருந்ததாம். ஒரு காட்சியிலாவது அவரை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

எனவே இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்தப்போது அதில் ஒரு பாடலுக்கு மட்டும் இயக்குனரை வற்புறுத்தி ஸ்ரேயாவை நடிக்க வைத்தாராம் வடிவேலு. இப்படியாக பயில்வான் ரங்கநாதன் அந்த காணொளியில் கூறியுள்ளார்.