நான் வெற்றிமாறனுக்கு நடிக்கணும்… பாதியிலேயே படத்தை விட்டு கிளம்பும் விஜய் சேதுபதி… கவலையில் மிஷ்கின்!..
2020இல் சைக்கோ திரைப்படம் வெளியான பிறகு மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் யாவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன என்று கூறலாம். சைக்கோ திரைப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் தயாரான திரைப்படம் துப்பறிவாளன் பாகம் 2.
இந்த திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது சம்பளம் ரீதியாக நடிகர் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த திரைப்படம் பாதியிலேயே நின்றது. பாக்கி திரைப்படத்தை தானே படமாக்கி வெளியிட்டுக் கொள்வதாக விஷால் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த படம் பாதியிலே நின்ற நிலையில் அடுத்து மிஸ்கின் நடித்து இயக்கிய திரைப்படம் பிசாசு 2. பிசாசு இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரமாக நடித்தார். வெகு காலங்களாக அந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து வந்தது.

ஆனால் இன்னும் அந்த படம் வெளியிடுவது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அடுத்தது விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்கிற திரைப்படத்தை இயக்க தயாராகி விட்டார் இயக்குனர் மிஷ்கின்.
இதற்கான பட செட்டுகள் ஏற்கனவே போடப்பட்டு விட்டன ஒரு ட்ரெயின் பெட்டியில் தான் படத்தின் கால்வாசி கதை இருப்பதாக கூறப்படுகிறது எனவே 60 நாள் ஷூட்டிங் முழுக்க படத்தின் செட்டில்தான் நடக்கப்போகிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே வெற்றிமாறனின் விடுதலை பாகம் இரண்டிற்கான படப்பிடிப்பும் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சூரி முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் ஆனால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிலையில் கொஞ்ச நாள் டிரெயின் படப்பிடிப்பில் இருந்துவிட்டு பிறகு இரண்டிற்கான படப்பிடிப்பிற்கு சென்று விடுவார் விஜய் சேதுபதி என்று கூறப்படுகிறது.
இதனால் மிஷ்கின் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது ஏனெனில் 100 நாட்களுக்குள் மொத்த படத்தையும் முடித்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்கலாம் என்று நினைத்திருந்தாராம் மிஷ்கின். ஆனால் விஜய் சேதுபதியின் கால்ஷீட்டில் இருக்கும் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு இன்னும் அதிக நாட்கள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.