Vaali and Nagesh : தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். காமெடியனாக நாகேஷ் நடித்தப்போது அவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல திரைப்படங்கள் நாகேஷின் நகைச்சுவைக்காகவே ஓட துவங்கின.இந்த நிலையில் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட நாகேஷ் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
சினிமாவில் அதிக வளர்ச்சி ஆன பிறகும் கூட நாகேஷ் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது கவிஞர் வாலியை புகழ்ந்து இளையராஜா அதில் பேசி கொண்டிருந்தார். அப்போது இளையராஜா பேசும்போது வாலி தமிழ் சினிமாவில் தனித்துவமான கவிநயம் கொண்டவர்.

நாம் பாடலுக்கு காசே கொடுக்கவில்லை என்றாலும் கூட அவர் இலவசமாக பாடல் வரிகள் எழுதி தருவார் என இளையராஜா கூறியிருந்தார். அதற்கு பிறகு மேடை ஏறிய நாகேஷ் அதை வலுவாக எதிர்த்திருந்தார். அவர் கூறும்போது தமிழ் சினிமாவிலேயே நானும் வாலியும் தான் எல்லோரிடமும் வாங்க வேண்டிய காசை மொத்தமாக வசூல் செய்தவர்கள்.
எங்கள் அளவிற்கு யாருமே செய்திருக்க முடியாது. ஆனால் இளையராஜா பேசும்போது வாலி இலவசமாக பாட்டு எழுதி கொடுத்ததாக கூறியிருந்தார். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கூறியிருந்தார் நாகேஷ்.






