நல்லா ஆடுனப்ப ஒரு அவார்ட் கூட கொடுக்கல.. விரலை மட்டும் ஆட்டுனதுக்கு நேஷனல் அவார்டு!.. பிரபுதேவா குறித்து பேசிய வடிவேலு…
Actor Vadivelu: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. சின்ன சின்ன காமெடிகளில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார் வடிவேலு. அவர் வந்த சமகாலத்தில் ஏற்கனவே கவுண்டமணி செந்தில் என்கிற இரு நடிகர்கள் பெரும் காமெடியன்களாக உச்சத்தை தொட்டிருந்தனர்.
இந்த நிலையில் வடிவேலு சினிமாவில் வரவேற்பை பெறுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. இந்த நிலையில் தனக்கென தனி நகைச்சுவை பாணியையும் உடல் மொழியையும் கொண்டு சினிமாவில் தனி இடத்தை பிடித்தார் வடிவேலு.

அதன் பிறகு கவுண்டமணிக்கும், செந்திலுக்கும் சினிமாவில் வரவேற்புகள் குறைந்த பிறகும் கூட வடிவேலுவிற்கு மட்டும் குறையவே இல்லை. இளம் காலக்கட்டங்களில் வடிவேலு, பிரபு தேவாவுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
ஒரு பேட்டியில் கூறும்போது பிரபுதேவா குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். பிரபு தேவா விருது வாங்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமான நடனங்களை கூட கஷ்டப்பட்டு பல படங்களில் நடனமாடியுள்ளார். ஆட துவங்கிவிட்டால் அவரது கால் தரையில் இருக்காது.
ஆனால் அந்த பாடல்களுக்கெல்லாம் அவருக்கு விருது கிடைக்கவில்லை. மின்சார கனவு திரைப்படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே என்கிற பாடலுக்கு ஆடியிருப்பார். அதில் விரலை மட்டும்தான் ஆட்டியிருப்பார் பிரபுதேவா. ஆனால் அந்த பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்கினார்கள் என கூறியுள்ளார் வடிவேலு.