Ayalaan and captain miller : தமிழ் சினிமாவில் எப்போதும் போட்டிக்கு பஞ்சமே இருக்காது. எல்லா காலங்களிலும் போட்டி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷிற்கு இடையே உள்ள போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் சுவாரஸ்யமான போட்டியாகும்.
ஏனெனில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ் என்பது பலரும் அறிந்த விஷயமே. விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் பணிப்புரிந்து வந்தப்போதே அவருக்கு தனது 3 திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
அதனை தொடர்ந்து அடுத்து நிறைய வாய்ப்புகளை பெற்றார் சிவகார்த்திகேயன். ஆனால் பிறகு தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தனுஷ் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலம் ஹாலிவுட் வரை சென்று நடித்துவிட்டார்.

இந்த நிலையில் தற்சமயம் பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அயலான் திரைப்படத்திற்கு போட்டியாக தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் திரையரங்கிற்கு பங்குகள் விற்றதில் கேப்டன் மில்லரை விடவும் அயலான் அதிக விலைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் 25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் 40 கோடிக்கு அயலான் திரைப்படம் விற்பனையாகியுள்ளதாம். படம் வெளியாகும் முன்பே தனுஷை முந்திவிட்டாரே சிவகார்த்திகேயன் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.