10 நிமிசத்துல கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்! ஆபாச படம் பார்த்து கெட்டுபோகும் 2k கிட்ஸ்! ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!
இயக்குனர் கே.எஸ். ராஜ்குமார் இயக்க சிவரஞ்சனி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். இதைத் தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், சேரனின் பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, தேசிய கீதம் மற்றும் புதுமை பித்தன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இயக்கிய பீஷ்மர் படத்திற்கு பிறகு திரை உலகில் நடமாட்டமே இல்லாமல் இருந்த நடிகர் ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தை இயக்கி, அதில் அவரே நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், திருப்பூரில் நடைபெற்ற கிராமிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர், அதனை பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல், 2k கிட்சை குறிவைத்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதாவது கிராமிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் குழந்தைகளை பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இன்றைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க கண்டதை பகிர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஆபாச படமா பாத்து இப்போ இருக்க பசங்க கெட்டுப்போறாங்க, அவர்களால் 10 நிமிஷம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாது என்றும் கையில் போன் இல்லை என்றால் அவர்களின் கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்னும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கேட்டார்கள் என்பதற்காகவே பெற்றோர் கஷ்டப்பட்டு செல் போனை வாங்கித் தருவதாகவும் ஆனால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் நடிகர் ரஞ்சித் அந்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் கோயம்புத்தூர் பாசை பேசும் நடிகர் மீது 2k கிட்ஸ் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனால் காண்டான 2k கிட்ஸ் கமென்ட்களில் கதறி வருகின்றனர்.