நான் அவ்வளவு சொல்லியும் அந்த பொம்பளை செஞ்ச காரியம்தான் காரணம்!.. மேடையை விட்டு இறங்கிய ஏ.ஆர் ரகுமான்!.

Music Director AR Rahman : தமிழ் மீது பற்று கொண்ட திரைப்பிரபலங்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் என கூறலாம். தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர் ஏ.ஆர் ரகுமான். பொதுவாக கமல்ஹாசனின் துவங்கி எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் வெளிநாடுகளில் விருது வாங்கும் விழாவிற்கு செல்லும் பொழுது அங்கு தமிழில் பேச மாட்டார்கள்.

ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வழங்கும் ஆஸ்கர் விருது விழாவிற்கு சென்று தனது மொழியில் கடவுளுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர் ரகுமான் அந்த விஷயத்தில் மிகவும் முக்கியமானவர். இதே மாதிரி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் நிறைய விஷயங்களை செய்திருக்கிறார்.

AR Rahman
Social Media Bar

அப்படியாக ஒருமுறை ஒரு படத்தின் விழாவிற்கு செல்லும் பொழுது அங்கு தொகுப்பாளர் ஹிந்தியில் பேசியதை கேட்டு வேக வேகமாக ஏ.ஆர் ரகுமான் கீழே இறங்கி விடுவார். இந்த நிலையில் இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது எனக்கு ஹிந்தி மீது எந்த ஒரு வெறுப்பும் கிடையாது.

தொகுப்பாளர் செய்த வேலை:

அந்த நிகழ்வை பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள் அதாவது அது ஒரு ஹிந்தி திரைப்படத்தின் வெளியீட்டு விழா. அந்த ஹிந்தி படத்தை தமிழ் டப்பிங் செய்திருந்தார்கள். எனவே தமிழ் மக்கள் மத்தியில் அந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காகதான் அந்த விழா நடத்தப்பட்டது.

ar-rahman
ar-rahman

எனவே நான் அந்த விழாவிற்கு வரும்பொழுது ஹிந்தியில் யாரும் பேசி விடாதீர்கள். இந்த படத்தை தமிழ் படம் என்று மக்கள் மத்தியில் நம்ப வைக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்படி இருந்தும் நான் மேலே ஏறியதும் அங்கு இருந்த தொகுப்பாளர் என்னிடம் ஹிந்தியில் கேள்விகளை கேட்டார்.

அதனால்தான் நான் ஒரு நகைச்சுவைக்காக அப்போது கீழே இறங்கினேன் ஆனால் அதை பலரும் தவறாக நினைத்துக் கொண்டனர் என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர் ரகுமான். மேலும் தனக்கு தனது தாய் மொழி மீது அதிக அன்பு உண்டு அதற்காக மற்ற மொழிகளை இழிவாக பார்க்கவில்லை என்று கூறுகிறார் ஏ.ஆர் ரகுமான்.