நான் நிறைய படத்துல வெற்றி கொடுத்ததுக்கு அந்த லைட்மேன்தான் காரணம்!.. இயக்குனருக்கே தெரியாமல் நாகேஷ் செய்த வேலை!..

Actor Nagesh : தமிழ் திரையுலக காமெடி நடிகர்களில் முக்கியமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக நடிகர் நாகேஷும் இருப்பார் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பான நடிகர் என்று நாகேஸை கூறலாம்.

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே அவர் கதாநாயகனாக நடித்த எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் மாதிரியான திரைப்படங்கள் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றன என்றாலும் கூட காமெடி நடிகனாக பெரிதாக பதிவாகிவிட்டதால் தொடர்ந்து காமெடி திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார் நாகேஷ்.

Nagesh
Nagesh
Social Media Bar

பொதுவாக ஒரு திரைப்படம் எடுக்கப்படும் பொழுது அதில் காட்சிகள் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை இயக்குனர்தான் முடிவு செய்வார். இயக்குனருக்கு அந்த காட்சி திருப்தியாக இல்லை என்றால் திரும்ப திரும்ப அந்த காட்சிகள் படமாக்கப்படுவதை அனைவரும் அறிந்திருப்போம்.

ஆனால் நாகேஷை பொருத்தவரை அவரது கதையே வேறு என்று கூறப்படுகிறது. நாகேஷ் நடிக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் அவருக்கு தெரிந்த லைட் மேன் ஒருவருக்கு வேலை வாங்கி கொடுத்து விடுவாராம்.

நடிகர் நாகேஷிற்கு லைட் மேன் செய்த உதவி:

அந்த லைட் மேன் படப்பிடிப்பு நேரத்தில் படப்பிடிப்பு செட்டிற்கு மேலே தான் அமர்ந்திருப்பாராம். ஒரு காட்சி எடுக்கப்பட்ட உடனேயே நாகேஷ் அவரை தான் திரும்பி பார்ப்பாராம். அவர் அந்த காட்சி சரியாக இருக்கிறது என்று கூறினால் அடுத்த காட்சியை நடிக்க சென்று விடுவார்.

actor-nagesh
actor-nagesh

ஒருவேளை அந்த காட்சி நன்றாக இல்லை என்று அந்த லைட் மென் கூறிவிட்டால் இயக்குனரே அந்த காட்சி நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் நாகேஷ் ஏற்றுக்கொள்ள மாட்டாராம். திரும்பவும் அந்த காட்சியை நடிப்பாராம்.

ஏனெனில் அந்த லைட் மேன் கூறும் கருத்துக்களை நான் பொதுமக்களின் கருத்தாய் பார்க்கிறேன் என்று கூறுகிறார் நாகேஷ். மேலும் அவர்கள் நம்மை விட அதிகமாக திரைப்படம் பார்ப்பவர்கள் அதிகமான படப்பிடிப்பில் இருந்தவர்கள் எனவே நடிப்பில் நம்மை விட அவர்களுக்கு அறிவு அதிகமாகவே இருக்கும் என்று கூறுகிறார் நாகேஷ். அந்த சிந்தனை தான் எனக்கு நிறைய திரைப்படங்களில் வெற்றி கொடுத்தன என்று நாகேஷ் கூறுகிறார்.