விருப்பமே இல்லாமல்தான் அஜித்தை வைத்து படம் இயக்க போனேன்!.. அங்க பண்ணுனதுதான் சம்பவம்!.. விளக்கிய கௌதம் மேனன்!.

Gautham Menon : தமிழில் காதல் திரைப்படத்திலேயே ஆக்சன் காட்சிகளை வைத்து ஆக்சன் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே மின்னலே, வாரணம் ஆயிரம் மாதிரியான சில திரைப்படங்கள் பெரிதாக ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் முழுமையாக காதல் கதையுடன் சென்றது.

அதற்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் எவ்வளவு காதலை கொண்டிருக்கிறதோ அதே அளவிற்கு வயலன்ஸ் காட்சிகளையும் கொண்டிருக்கும். முதலில் துவங்கும் பொழுது காதல் கதையாக துவங்கும் பிறகு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக மாறிவிடும்.

gautham-menon
gautham-menon
Social Media Bar

இதுதான் கௌதம் மேனனின் ஸ்டைல் என்று கூறலாம் கௌதம் மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்கினார். என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்குவதற்காக செல்லும் பொழுது அந்த திரைப்படத்தை இயக்குவதற்கே எனக்கு விருப்பமில்லை ஏனெனில் முதலில் வேறு ஒரு கதையைதான் திரைப்படமாக இயக்க இருந்தார்கள்.

அது ஏற்கனவே வேறு மொழியில் வந்த ஒரு படத்தின் கதையாகும். அதையே தமிழில் ரீமேக் செய்வதாகதான் திட்டமிட்டிருந்தனர். எனக்கு ரீமேக் திரைப்படங்களை இயக்குவதில் விருப்பமில்லை. இருந்தாலும் அஜித் திரைப்படத்தை இயக்குவதற்கு கிடைத்த வாய்ப்பை கைவிட வேண்டாம் என்று அந்த திரைப்படத்தில் சேர்ந்தேன்.

படத்தில் சேர்ந்து ஒரு வாரத்திற்குள்ளாக எப்படியாவது கதையை மாற்றி நம்முடைய கதையை படமாக்கி விட வேண்டும் என்று நினைத்தேன். எனவே தயாரிப்பாளரிடம் சென்று என்னிடம் ஒரு கதை உள்ளது அதையும் நான் சொல்கிறேன் ஒருவேளை அது உங்களுக்கு பிடித்திருந்தால் அதை படமாக்கலாம் என்று கூறினேன்.

தயாரிப்பாளரும் அதற்கு ஒப்புக்கொண்டார் அடுத்த ஒரு வாரத்தில் நான் எழுதிய கதையை கொண்டு வந்து கூறினேன் அது அஜித்துக்கு பிடித்து விடவே என்னை அறிந்தால் திரைப்படத்தை தயார் செய்தோம். அதேபோல இந்த திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ற பொழுது யாருமே ஒப்புக்கொள்ளவில்லை.

பிறகு அருண் விஜயை வைத்து நான் ஒரு காட்சியை படமாக்கி அதை கொண்டு வந்து அவர்களிடம் போட்டுக் காட்டிய பிறகுதான் அருண் விஜய்யை வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டனர் என்று கூறுகிறார் கௌதம் மேனன்.