உங்க அறிவை பார்த்தாதான் காமெடியா இருக்கு!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய கங்கனா ரனாவத்!.
தாம் தூம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகையாவார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவரது திரைப்படங்கள் எதுவுமே ஹிந்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
தமிழில் இவர் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் கூட எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஒரு பக்கம் இவர் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய நபராக இருக்கும் இவர் தற்சமயம் தேர்தல் பிரச்சாரங்களை துவங்கியுள்ளார்.

இதற்காக பல டிவி பேட்டிகளையும் அளித்து வருகிறார். வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இதற்காகவே இந்த பிரச்சார வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஒரு பேட்டியில் கங்கனா ரனாவத் பேசியிருந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தப்பிறகு இந்தியாவின் முதல் பிரதமரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார் என கேட்டிருந்தார். ஆனால் உண்மையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு ஆவார். அப்படியிருக்கும்போது கங்கனா ரனாவத் அதுக்கூட தெரியாமல் இருக்கிறாரே என அவரை கேலி செய்து வந்தனர் நெட்டிசன்கள்.
கங்கனா ரனாவத்தின் விளக்கம்:
இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கங்கனா ரனாவத். அதில் அவர் கூறும்போது பாரதத்தின் முதல் பிரதமர் யார் என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆரம்பநிலை கல்வி கூட நான் கற்கவில்லை என சிலர் கூறுகிறீர்கள். ஆனால் நேரு குடும்பத்தை அடிப்படையாக கொண்ட எமர்ஜென்சி என்கிற திரைப்படத்தை நான் எழுதி இயக்கி நடித்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் உங்களுக்குதான் ஒன்றும் தெரியவில்லை. உங்கள் பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது என பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் கங்கனா.
அதாவது 21 அக்டோபர் 1943 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் அவராகவே ஆசாத் இந்தியா என்ற அரசை சிங்கப்பூரில் நிறுவினார். அதில் அவரை அவரே பிரதமர், மாநில தலைவர், போர் அமைச்சர் ஆகிய பதவிகளில் அறிவித்துக்கொண்டார். அதனை அடிப்படையாக கொண்டுதான் கங்கனா ரனாவத் அவரை இந்தியாவின் முதல் பிரதமர் என கூறியுள்ளார்.