அஜித் படத்தில் வில்லனாக களம் இறங்கும் பிரபல ஹீரோ!.. பேன் இந்தியா படமாக்குவதற்கு ப்ளான்!.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.

படப்பிடிப்புக்கு நடுவே அஜித் பலமுறை சுற்றுலா சென்ற காரணத்தாலேயே இந்த திரைப்படம் வெகு நாட்களாக படமாக்கப்பட்டு கொண்டுள்ளது. மேலும் விஜய்யை போலவே அஜித்தும் வெகு நாட்களுக்கு சினிமா துறையில் இருக்க போவதில்லை என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படம்தான் அவரது கடைசி படம் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார்.

ajith
ajith
Social Media Bar

இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் யாரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என பேச்சுக்கள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தை பேன் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

எனவே கண்டிப்பாக பாலிவுட் நடிகரைதான் வில்லனாக படத்தின் வைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். முதலில் நடிகர் பாபி தியோலை வில்லனாக நடிக்க வைக்க நினைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே அனிமல், கங்குவா மாதிரியான படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

எனவே நடிகர் ஜான் ஆபிரகாமை இந்த படத்தில் வில்லனாக களம் இறக்குகின்றனர். இவர் பாலிவுட்டில் பிரபல ஹீரோவாக நடித்து வரும் நடிகராவார். ஏற்கனவே இப்படிதான் விவேகம் திரைப்படத்தில் நடிகர் விவேக் ஓப்ராயை வில்லனாக நடிக்க வைத்தனர். அது அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை.

எனவே இதுக்குறித்து ரசிகர்களுக்கு கொஞ்சம் அச்சமும் இருக்கதான் செய்கிறது.