கைல கால்ணா காசு இல்லாம நின்னப்ப எனக்கு உதவுனவர் கேப்டன்!.. மனம் திறந்த நடிகர்!.

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பலருக்கும் நன்மைகள் செய்தவர் என்றால் அது விஜயகாந்த்தான். சினிமாவிற்கு வந்த காலம் முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பலருக்கும் வாழ்வளித்தவராக விஜயகாந்த் இருந்துள்ளார்.

அவர் உயிருடன் இருந்தப்போது பெரிதாக யாரும் பேசவில்லை. அதனால் பொது மக்களுக்கும் விஜயகாந்த் குறித்து ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இறுதி காலக்கட்டங்களில் விஜயகாந்த் குறித்த நிறைய விஷயங்கள் வெளிவர துவங்கின.

சமுத்திரக்கனி தனது முதல் படத்தை இயக்கிவிட்டு இரண்டாவது திரைப்படத்தை இயக்க காத்திருந்தப்போது அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இதனை அறிந்த விஜயகாந்த் அவரை அழைத்து அவருக்கு நெறஞ்ச மனசு திரைப்படத்தில் இயக்குனராக வாய்ப்பு கொடுத்தார்.

Vijayakanth
Vijayakanth
Social Media Bar

அதே சமயம் அப்போது தயாரிப்பாளராக இருந்த ஜெயபிரகாஷ் வறுமையில் இருந்தார். பெரிய ஹீரோவை வைத்து ஒரு சின்ன படத்தை தயாரித்தால் சமாளித்துவிடலாம் என நினைத்தார். எனவே அவரை அழைத்து நெறஞ்ச மனசு திரைப்படத்தை அவரை தயாரிக்க சொன்னார்.

அப்போது படம் துவங்கியப்போது விஜயகாந்த் சம்பளம் கூட வாங்கவில்லை. எப்போது குடுக்க முடியுமோ அப்போது சம்பளத்தை கொடு என கூறியுள்ளார் விஜயகாந்த். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஜெய பிரகாஷ்.