நாட்டு நாட்டு பாட்டு ஆஸ்கர் அளவுக்கு வொர்த் இல்ல?! மனம் திறந்த இசையமைப்பாளர் கீரவாணி!

தெலுங்கில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பேன் இந்தியா அளவில் பிரபலம் ஆனவர் ராஜமௌலி. இவரது பாகுபலி, மகதீரா, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக இருப்பவர் எம்.எம்.கீரவாணி.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த கீரவாணி ‘ஆர் ஆர் ஆர்’ படத்திலும் ‘நாட்டு நாட்டு’ போன்ற பாடல்களை கொடுத்திருந்தார்.

ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் கீரவாணிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேசியுள்ள கீரவாணி ‘நாட்டு நாட்டு’ தனது சிறந்த பாடல் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “பாகுபலி உள்ளிட்ட படங்களுக்காக நான் அளித்த பாடல்களை ஒப்பிடும்போது, ஆர் ஆர் ஆர் படத்தில் வந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த பாடல் இல்லை. ஆனால் என்னுடைய மற்ற பாடல்களுக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அந்த பாடல் மூலம் கிடைத்ததாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.