சிங்கத்துக்கு வாலா இருக்குறதை விட பூனைக்கு தலையாவே இருந்துக்குறேன்.. இயக்குனரை செஞ்சுவிட்ட ஜெயம் ரவி!..
தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான திரைப்படங்களாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ஜெயம் ரவி. அவர் நடித்த முதல் திரைப்படமான ஜெயம் திரைப்படம் மிகவும் சீரியசான திரைப்படமாக இருக்கும்.
ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த தில்லாலங்கடி, சம்திங் சம்திங், எம் குமரன் மாதிரியான எல்லா திரைப்படத்திலும் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாக ஜெயம் ரவி நடித்திருப்பார்.
அந்த மாதிரி ஜாலியான கதாபாத்திரங்களை விடுத்து கொஞ்சம் சீரியசான கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார் தனி ஒருவன் மாதிரியான சில திரைப்படங்களில் அவர் நடித்தார். அந்த திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாலிவுட் சினிமா குறித்து ஜெயம் ரவி:
அதே சமயம் அந்த ஜாலியான ஜெயம் ரவி கேரக்டரும் அவருக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால்தான் அவ்வப்போது கோமாளி மாதிரியான ஜாலி திரைப்படங்களிலும் ஜெயம் ரவி நடிக்கிறார். ஆனால் ஜெயம் ரவியை பொறுத்தவரை அவர் ஜாலியாக நடிக்கும் திரைப்படங்கள் ஓடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஆனால் சீரியஸான திரைப்படங்கள் சில சமயங்களில் தோல்வியடைந்து விடுகின்றன. சமீபத்தில் சைரன், இறைவன், அகிலன் மாதிரியான நிறைய திரைப்படங்கள் இப்படித்தான் அவருக்கு தோல்வியைக் கொடுத்தது.
ஆனால் சமீபத்தில் அவர் நடித்த பிரதர் திரைப்படம் குறித்து அதிக வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பாலிவுட்ல எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
ஒரு இயக்குனர் கதை கூட கூறினார். ஆனால் அங்கு சென்றால் நான்கோடு ஒன்று ஐந்து நானும் ஒரு நடிகராக நான் இருக்க வேண்டியிருக்கும். தமிழில் எனக்கு நிறைய மரியாதை கொடுக்கிறார்கள். எனக்கென ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே பாலிவுட் வாய்ப்பை விடவும் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.