எங்க மரியாதையை குறைக்கிறது அவ்வளவு சரி கிடையாது.. ராணுவம் தொடர்பான தவறான காட்சிகள். அமரன் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்..!

There are reports that some scenes in Amaran starrer Sivakarthikeyan are causing controversy

தமிழில் தற்சமயம் வெளியாகிய அதிக வரவேற்பு பெரும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே அமரன் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வர துவங்கின.

அதனை தொடர்ந்து படத்திற்கான டிக்கெட் விற்பனையும் அதிகரித்தது தொடர்ந்து இன்னமும் அமரன் திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வருகிறது. இந்த நிலையில் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் படத்தில்  நிறைய காட்சிகள் இருந்ததாக பேச்சுக்கள் இருந்தன.

amaran
amaran
Social Media Bar

படம் குறித்த சர்ச்சை:

அதே சமயம் தற்சமயம் இந்த திரைப்படத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள். சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள் குறித்து அமரன் திரைப்படத்தில் காட்சிகள் மோசமானதாக வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

படத்தில் ஒரு காட்சியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் எளிதாக கொல்லப்படுவதாக காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ராணுவ வீரர்கள் கொல்லப்படும் போது மட்டும் தேச பக்தியை ஊட்டும் வகையில் அந்த காட்சிகளை அமைத்துவிட்டு சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர் தியாகங்கள் மோசமாக காண்பிக்கப்பட்டு இருக்கின்றன என்று கூறி தற்சமயம் வந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சி.ஆர்.பி.எப் துறையினர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கின்றனர்.