விஜய் படத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்.. வெளிப்படையாக கூறிய கோட் பட நடிகை..!
தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். பெரும்பாலும் தமிழ் நடிகைகள் பலரும் ஒரு முறையாவது விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. ஏனெனில் விஜய் படத்துக்கு என்று பெரிய வரவேற்பு உண்டு.
அது நடிகைகளுக்கும் அதிக வரவேற்பை உண்டாக்கி கொடுக்கும். இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் நடித்தது தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக நடிகை மீனாட்சி சௌத்ரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தற்சமயம் சினிமாவில் பிரபலமாகி வரும் ஒரு நடிகையாக மீனாட்சி சௌத்ரி இருந்து வருகிறார். அவர் நடித்த சிங்கர்ப்பூர் திரைப்படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து மீனாட்சி சௌத்ரி கூறும்போது எனக்கு கோட் படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததன் மூலமாக நிறைய எதிர்மறையான விமர்சனங்களை நான் சந்திக்க வேண்டி இருந்தது.
இது எனக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு பிறகு லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்தப்போது எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே இனி நல்ல கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார் மீனாட்சி சௌத்ரி.