நயன்தாரா, கே.ஜி.எஃப் ஹீரோ நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்.!

இப்போது எல்லாம் ஒரு திரைப்படம் நடிகர்களின் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு இப்போது ஒரு நபர் மிக எளிதாக பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்சமயம் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் கே.ஜி.எஃப் யஷ்.

யஷ் வெகு காலங்களாகவே கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத வரவேற்பை கே.ஜி.எஃப் திரைப்படம் அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானப்போது அதற்கு பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை.

ஆனால் இரண்டாம் பாகம் வந்தப்போது எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த ஒரு படம் மட்டும் 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கொடுத்தது.

Social Media Bar

இந்த நிலையில் பேன் இந்தியா நட்சத்திரமாக மாறினார் யஷ். அதனை தொடர்ந்து அடுத்து யஷ் நடித்து வரும் திரைப்படம் டாக்சிக்.இந்த படத்தின் கியாரா அத்வானி, நயன்தாரா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போது வனத்துறையின் ஒப்புதல் இல்லாமல் காட்டில் பல மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்சமயம் இந்த வழக்கு நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கேட்டு டாக்சிக் படக்குழுவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது நீதிமன்றம். எனவே இந்த படம் வெளியாவதில் சிக்கல்கள் வரலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன