Connect with us

தனுஷ்க்கு இணையாக சம்பளம் கேட்ட பிரதீப் ரங்கநாதன்..! ஆடிப்போன திரையுலகம்.!

Tamil Cinema News

தனுஷ்க்கு இணையாக சம்பளம் கேட்ட பிரதீப் ரங்கநாதன்..! ஆடிப்போன திரையுலகம்.!

Social Media Bar

கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. அவரே இயக்கி அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். லவ் டுடே திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி வசூல் கொடுத்தது. இதனை அடுத்து லவ் டுடே திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே அடுத்து டிராகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

மேலும் இயக்குனரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில் அடுத்து கமிட்டாகும் திரைப்படங்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

pradeep ranganathan

pradeep ranganathan

அதன்படி அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படங்களுக்கு 18 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். நடிகர் மணிகண்டன் மாதிரியான வளர்ந்து வரும் நடிகர்கள் 2க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் கூட இன்னமும் 4 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கவில்லை.

ஆனால் 1 படத்தில் மட்டும் கதாநாயகனாக நடித்துவிட்டு இப்போது நடிகர் தனுஷ்க்கு நிகரான சம்பளம் கேட்கிறாரே என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Bigg Boss Update

To Top