விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அன்ஷிதா. அன்ஷிதா நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது.
குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக அன்ஷிதா அறிமுகமாகியிருந்தார். அதன் மூலம் வரவேற்பை பெற்று பிக்பாஸில் இருந்து வந்தார். ஆனால் சில காலங்கள் மட்டுமே அவர் பிக்பாஸில் இருந்து வந்தார்.

அதற்கு பிறகு பிக்பாஸில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துள்ளார். எனது காதலனிடம் நான் எப்போதும் கெஞ்சிய வண்ணம் இருப்பேன்.
ஒருமுறை இதுக்குறித்து பிரியங்கா அக்கா எனக்கு அட்வைஸ் செய்தார்கள். அவர்கள் கூறும்போது எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது என அவர் கூறியிருந்தார். அந்த ஒரு விஷயம்தான் என் காதலை விட்டு பிரிய எனக்கு தைரியம் கொடுத்தது என கூறியுள்ளார் அன்ஷிதா.